Thursday 2nd of May 2024 06:49:25 AM GMT

LANGUAGE - TAMIL
விக்ரம்-துருவ்
சியான்-60 திரைப்படத்தின் உத்தியோகபூர்வ தகவல் வெளியானது!

சியான்-60 திரைப்படத்தின் உத்தியோகபூர்வ தகவல் வெளியானது!


சியான் விக்ரம் முதன் முறையாக மகனுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் அத்திரைப்படம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சியான்-60' எனக் குறிப்படப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மகன் துருவ் உடன் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் - துருவ் விக்ரம் என்ற இந்தக் கூட்டணியில் உருவாக இருக்கும் 'சியான்-60' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

'சீயான் 60' படத்தை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இவருடைய வெளியீட்டில் இளைய தளபதி விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' தயாராகி உள்ள நிலையில், விரைவில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டு வருகிறார். அதனைத் தொடர்ந்து 'கோப்ரா', 'துக்ளக் தர்பார்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'சீயான் 60' படத்தை தயாரிக்கவுள்ளார்.

'சீயான் 60' 2021-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE